Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மோடிக்கு மாற்று “இவரா?”.. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக “4 தலைவர்கள்”

prashant-kishor-bccl

சென்னை: மோடிக்கு மாற்றாக, பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் களமிறக்கப்படும் விஐபி யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.. அதில் 4 பேரின் பெயர்கள் டாப் லிஸ்ட்டில் உள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்தடுத்து மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க போகிறது.. முக்கியமாக எம்பி தேர்தலை நோக்கி தேசிய அரசியல் நகர்ந்து வருகிறது..

இப்படிப்பட்ட சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற விஷயமும் சேர்ந்தே கிளம்பி வருகிறது.. இதில் எதிர்க்கட்சிகள் தரப்பில் 4 பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

ராகுல்காந்தி

கடந்த மாதம், பிரசாந்த் கிஷோரும், ராகுல்காந்தியும் சந்தித்தபோதே, முதல் க்ளூ கிடைத்தது போல இருந்தது.. ஒருவேளை ராகுல்காந்தியை பிரதமராக்க பிகே பிளான் செய்திருக்கிறாரோ? என்ற சந்தேகம் வலுத்தது.. ஆனால், சொந்த கட்சிக்கே தலைமை பொறுப்பை ஏற்க தயங்கி கொண்டிருக்கும் ராகுல், இந்த தேசத்தையே ஆளக்கூடிய பிரதமர் வேட்பாளராக ஓகே சொல்வாரா? என்ற யோசனையும் உள்ளது.

பாஜக

மற்றொருபக்கம், பாஜகவுக்கே ஒற்றை நபராக தண்ணி காட்டி கொண்டிருக்கும் மம்தா பானர்ஜியும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. மம்தாவுக்கு முன்பிருந்தே பிரதமர் கனவு இருக்கத்தான் செய்கிறது.. ஆனால், அதற்கான கால நேரம் கூடி வரவில்லை.. இப்போது எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் வேலையில் இறங்கி உள்ளார்.. இப்படி ஒரு முன்னெடுப்பை, முன்பு சந்திரபாபு நாயுடுதான் செய்தார்.. இந்த முறை மம்தா ஆர்வம் காட்டி வருவதால், இவர்தான் அடுத்த பிரதமர் வேட்பாளரோ என்ற டவுட் வந்து போகிறது.

முதல்வர்

இப்படிப்பட்ட சூழலில் முக ஸ்டாலினையும் எண்ணிப்பார்க்க வேண்டி உள்ளது.. மிக குறுகிய காலத்தில் தேசிய அளவில் பிரபலமான முதல்வராகி உள்ளார்.. ஆட்சியில் நல்ல பெயர் எடுத்து வருகிறார்.. இந்த 2 மாசத்திலேயே 2 முறை டெல்லிக்கு சென்று தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார்.. திமுகவின் வளர்ச்சி பாஜகவை சற்று அசைத்து பார்த்தே வருகிறது.. அதனால்தான், ஸ்டாலினை “தொட” முடியாமல், அதிமுகவை காப்பாற்ற முடியாத சூழலில் பாஜக மேலிடம் தயங்கி வருகிறது.. அதனால் தேசிய அரசியலையும் ஸ்டாலினையும் பிரித்து பார்க்க முடியாத நிர்ப்பந்தமும், யதார்த்தமும் ஏற்பட்டு வருகிறது.

கருணாநிதி

இருப்பினும் இதுவரை திமுக சார்பில் பிரதமர் வேட்பாளர் அளவுக்கு யாரையும் திமுக ஒருபோதும் முன்னிறுத்தியதில்லை. கருணாநிதி இருந்தபோதே அவர் தன்னை பிரதமர் வேட்பாளராக ஒரு போதும் கருதியதில்லை. பிரதமரை நிர்யணிக்கும் முக்கிய இடத்தில் இருந்த நிலையிலும் கூட அவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. அதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் தற்போது ஸ்டாலினும் எடுக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம், மத்தியில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைந்தால் நிச்சயம் திமுகவின் செல்வாக்கு வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பினராயி விஜயன்

அடுத்ததாக, எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் பினராயி விஜயனை நிறுத்தாலாமே என்ற எண்ணமும் எழுந்துள்ளது.. பினராயியை பொறுத்தவரை இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக பலமுறை பல மீடியாக்களால், அமைப்புகளால் பாராட்டப்பட்டுள்ளார்… பெருந்தொற்றுக் காலத்தை மிகச் சிறப்பாக கையாண்ட முக்கியமான மாநிலம் கேரளா… அந்த மாநிலத்தில் கடந்த 2வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை.

வேக்சின்

வேக்சின் போடுவதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். மக்களுக்கு தேவையானதை செய்வதிலும் அவர்கள் சுணக்கம் காட்டவில்லை. அண்டை மாநிலங்களுடனான உறவையும் சிறப்பாக பேணி வருகிறார் விஜயன். குறிப்பாக தமிழகத்துடன் முன்பெல்லாம் அடிக்கடி கேரளாவுக்கு மோதல் ஏற்படும். ஆனால் பினராயி விஜயன் வந்தது முதல் பெரிய அளவில் முரண்பாடுகள் ஏற்படவில்லை. மோதல் வரவில்லை. ஒரு மாநில முதல்வராக மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே தலைமை தாங்கும் தகுதியுடன் கூடியவராகவும் விஜயன் இருக்கிறார்.. அதனால் இவரும் சாய்ஸில் உள்ளார்.

மம்தா பானர்ஜி

ஸ்டாலினும்சரி, மம்தாவும் சரி, ராகுலும் சரி பினராயும் சரி.. நால்வருமே துணிச்சல் மிகுந்தவர்கள்.. நால்வருமே சீனியர்கள்.. நால்வருமே மக்களின் நன்மதிப்பை நேரடியாக பெற்றவர்கள்.. நால்வருமே பாஜகவை சரமாரியாக விமர்சித்து வருபவர்கள்.. அந்த வகையில் இதில் ஒருவர்தான், மோடிக்கு மாற்றாக பிரதமர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படுவார் என்றே கணிக்கப்படுகிறது.. யார் அவர்?!

எதிர்க்கட்சி

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் ஒரே குறி மோடியாக மட்டுமே இருப்பதால் கடைசி நேரத்தில் பாஜக தரப்பிலும் ஏதாவது அதிரடி காட்டும் திட்டம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது கடைசி நேரத்தில் நரேந்திர மோடிக்குப் பதில் வேறு யாராவது ஒரு தலைவரை பிரதமராக்க பாஜக முயற்சிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது ஆர்எஸ்எஸின் திட்டம் என்ன என்று தெரியவில்லை. மோடியால் வெற்றிக்கு ஆபத்து வரும் என்றால் வேறு தலைவரை முன்னிறுத்தவும் ஆர்எஸ்எஸ் தயங்காது என்றே சொல்கிறார்கள்.

புதிய பிரதமர்

பாஜகவைப் பொறுத்தவரை தலைவர்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு வேளை புதிய பிரதமர் என்ற திட்டத்துக்கு பாஜக வந்தால் பிரதமர் வேட்பாளர்களாக அமித் ஷா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் என்று பலரும் லைன் கட்டி உள்ளனர். எனவே அவர்களுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது ஒரு பிரச்சினையே கிடையாது. மேலும் எதிர்க்கட்சிகளைப் போல இங்கு தலைமைக்கு கட்டுப்படாமல் ஆளாளாக்கு நாட்டாமை செய்வது என்ற பேச்சுக்கும் இடமில்லை என்பதால் பாஜக தெம்பாகவே இருக்கிறது. இருப்பினும் மோடி தலைமையிலையே வரும் தேர்தலையும் பாஜக சந்திக்கும் என்றுதான் வலுவாக நம்பப்படுகிறது. பார்க்கலாம்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest