Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் தலைமறைவு:உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் கைது

photo-3
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அவருக்கு உடைந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி அடுத்த நல்லாவாடு மீன கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(32), ஐ.ஆர்.பி.என் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஜெகதிஸ்வரி என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், ஜெகதிஸ்வரி கணவர் வெளியூரில் பணி புரிந்து வருவதால் குமரவேல் தினமும் ஜெகதிஸ்வரியின் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் சில தினங்களுக்கு முன் குமரவேல் குடிபோதையில் ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு சென்று அவரின் 12 வயதான மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார், இதில் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி வெளிநாட்டில் உள்ள தனது தந்தையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார்,இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்து உடனடியாக புதுச்சேரி வந்த சிறுமியின் தந்தை குழந்தைகள் நல வாரியத்தில் நடந்தவை குறித்து தெரிவித்ததை அடுத்து குழந்தைகள் நல வாரியத்தினர் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவலர் குமாரவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவர் மீது தவளகுப்பம் போலிஸார் போஸ்கோ சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் தலைமறைவாக உள்ள காவலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest