Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

சினிமா பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… திரைக்கு வரும் 40 புதிய படங்கள்!

movietime-cinemas-to-invest-rs-125-crore-on-expansion-1599544257

சென்னை : தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களும் வரிசைகட்டி காத்திருக்கின்றன. திரையரங்கில் வெளியாகும் திரைப்படத்தை திருவிழாவாக கொண்டாட சினிமா பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

திரையரங்கு திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நேற்று முதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சினிமா தியேட்டர்களில் திரைப்படங்கள் பார்க்க ரசிகர்களை 50 சதவீதம் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து நிலையான வழிகாட்டுதல்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து,தமிழககத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களிலும் துய்மைப்பணிகள் நடந்தன. இந்த நிலையில்,ஒரு சில ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படாததால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

பழைய படங்கள்

தியேட்டர்கள் திறந்தாலும் பழைய திரைப்படங்களையே ஓட்ட வேண்டும். சமீபத்தில் வெளியான பல திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டு விட்டன. எனவே பழைய திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் வரமாட்டார்கள் என்பதால், 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பிறகு சில புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிற. எனவே அன்றைய தினம் முதல் 100 சதவீத தியேட்டர்கள் இயக்கும் என்று நம்பப்படுகிறது.

40 புதிய படங்கள்

கொரோனாவால் வெளியாகாமல் இருந்த கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. விஜய்சேதுபதியின் மாமனிதன், யாதும் ஊரே யாரும் கேளிர், லாபம் திரைப்படம் ரிலிசுக்கு தயாராக உள்ளது. லாபம் படத்தை இயற்கை மற்றும் பூலோகம் போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கும் திரைப்படம் லாபம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சுருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்டர்

குற்றம் 23 மற்றும் செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த அருண் விஜய் நடிகை ஸ்டெபி படேல் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் பார்டர். இப்படத்தை ஈரம், வல்லினம் மற்றும் ஆறாது சினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

தலைவி

மறைந்த முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் திரைப்படம் தலைவி. இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்திலும் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் வேடத்திலும் நடித்துள்ளனர். எ.ல்.விஜய் இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்றஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்தன. தற்போது திரையரங்கு திறக்கப்பட்டுள்ளதால், இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

சிவகுமாரின் சபதம்

மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ஹிப்ஹாப் தமிழா. தற்போது இவர் இயக்கத்தில் இவரே இசையமைத்து நடிகை மதுரி ஜெயினுடன் நடிக்கும் சிவக்குமாரின் சபதம் இந்த திரைப்படமும் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

கோடியில் ஒருவன்

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு, பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக திரையரங்கு திறப்புக்காக காத்திருக்கிறது.

அரண்மனை 3

பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராசி கண்ணா, சாக்ஷி அகர்வால் மற்றும் ஆண்ட்ரியா போன்ற ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருக்கும் திகில் திரைப்படமான அரண்மனை 3. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்புகள் கடந்த சில நாட்களாக இருந்து வரும் நிலையில் இந்த திரைப்படமும் வெயிட்டிங்கில் உள்ளது.

பல திரைப்படங்கள்

எம்.ஜி.ஆர் மகள், லிப்ட், கூகுள் குட்டப்பா, லாபம், மெமரிஸ்,முருங்கக்காய் சிப்ஸ், ஹாஸ்டல், குருதி ஆட்டம், பஹிரா, ராக்கி, குதிரைவால், மிர்ச்சி சிவாவின் சுமோ, ஒத்தைக்கு ஒத்த, சந்தானம் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம், திரிஷாவின் ராங்கி, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள கட்டில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓமன பெண்ணே, இடியட், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஆர்.கே.சுரேசின் விசித்தி கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்க திறப்புக்காக காத்திருந்தன. தற்போது திரையரங்கு திறக்கப்பட்டுள்ளதால் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest